Thursday, January 27, 2011

புத்தகக் கண்காட்சி 2011

எல்லா வருடமும்  ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி ரொம்ப பிரபலம். கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு முறை தவறாமல் போய் வருகிறேன். போவது மட்டும் இல்லாமல் நிறைய புத்தகங்களை வாங்கி வருவது என் வழக்கம்.இதற்காகவே ஒவ்வொரு வருடமும் குறைந்தது 1000 ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவேன்.

எல்லா வருடமும் சனி அல்லது ஞாயறு கிழமைகளில் செல்வேன். ஆனால் அப்போது தான் கூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஸ்டாலிலும் புத்தகங்களை பொறுமையாக பார்க்க முடியாது. அதனால் இந்த முறை வெள்ளிக்கிழமை சென்றேன்.
 நான் எதிர் பார்த்த மாதிரி கூட்டம் இல்லை. ஒவ்வொரு ஸ்டாலிலும் பொறுமையாக புத்தகங்களை பார்வையிட முடிந்தது. இந்த முறை கிழக்கு, உயிர்மை பதிப்பகங்களில் இருந்து சில புத்தகங்களையும், வைரமுத்து கவிதை புத்தகமும்  வாங்கலாம் என்று நினைத்திருந்தேன்.

நான் சென்ற முதல் நாள் வைரமுத்து தான் சிறப்பு விருந்தினர். வைரமுத்துவின் வைர வரிகளுக்கு நான் என்றுமே அடிமை. காதலைப் பற்றி சினிமா பாடல்களில் வைரமுத்துவை விட சிறப்பாக சொன்னது என் பார்வையில் வேறு எவரும் இலர். அவரை நேரில் பார்க்க முடிந்தது. அவர் மட்டும் இல்லாமல் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஞானி, சாரு இவர்களையும் பார்க்க முடிந்தது.

இந்த முறை நாவல்கள்,சிறுகதை தொகுப்பு எதுவும் வாங்க கூடாதென்று முடிவெடுத்திருந்தேன். சில வாழ்க்கை வரலாறு புத்தகங்களும், கவிதை தொகுப்புகளும், சில கட்டுரை புத்தகங்களும் வாங்கலாம் என்று நினைத்தேன். சென்ற முறை வாங்கிய சில புத்தகங்களை இன்றும் திறந்து கூட பார்க்க வில்லை. அதனாலேயே இந்த முறை குறிப்பிட புத்தகங்களை மட்டும் வாங்கலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த முறை வாங்கிய புத்தகங்களின் விவரம்
 ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கை - கிழக்கு பதிப்பகம்
ஸ்ரீ ரங்கம் டு சிவாஜி (சுஜாதாவின் வாழ்க்கை) - குமுதம் பதிப்பகம்
சிறிது வெளிச்சம் (எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்)  - விகடன் பதிப்பகம்
தேசாந்திரி (எஸ். ராமகிருஷ்ணன் பயணக் கட்டுரைகள்) - விகடன் பதிப்பகம்
உலக சினிமா (பாகம் 1 ) -  விகடன் பதிப்பகம்

சிறிது வெளிச்சம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன். இது ஏற்கனவே ஆனந்த விகடனில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விசயங்களை மிகச் சிறந்த முறையில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார். நிறைய சின்ன சின்ன விசயங்களை வாழ்விற்கு தேவையான விசயங்களை  நாம் மறந்து விடுகிறோம். அவற்றை பற்றி அவருக்கே உரித்தான எளிய நடையில், சில உலக சினிமாக்களின் கதைகளோடு ஒப்பிட்டு கொடுத்துள்ளார்.

சீக்கிரமே இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டு மற்ற புத்தகங்களையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.



.

Monday, January 10, 2011

புத்தாண்டுக் கொண்டாட்டம்

நான் சென்னைக்கு வந்து இந்த டிசம்பரோட நாலு வருஷம் முடிஞ்சது. ஒவ்வொரு வருசமும் புத்தாண்டுக்கு முந்தின நாள் இரவு சென்னையே கலை கட்டும். மெரீனா பீச், பெசன்ட் நகர் பீச் என எல்லா கடற்கரை ஓரங்கள்ளையும் மக்கள் கூட்டம் கூட்டமா கூடி ஒருத்தருக்கு ஒருத்தர் மாறி மாறி "ஹேப்பி நியூ இயர்" "ஹேப்பி நியூ இயர்" என சொல்லி புத்தாண்டு வாழ்த்துக்கள பகிர்ந்துப்பாங்க.நான் இது வரை ஒரு நியூ இயர் கூட வெளில போய் என்ஜாய் பண்ணினது இல்ல. பத்து இல்ல பதினோரு மணிக்கே குப்புற படுத்து தூங்கிடுவேன். ஆனால் இந்த வருஷம் தான் நான் முதல் முறையா புத்தாண்டுக்கு முந்தின நாள் வெளில போனேன்.இந்த வருடமும் எனக்கு வெளில போறதுக்கு விருப்பம் இல்ல. ஆனா என்னோட நண்பர்கள் என்ன விடறதா இல்ல அதனால அவங்களோட விருப்பத்துக்காக வர்றேன்னு ஒத்துகிட்டேன்.

நாங்க போனது நுங்கம்பாக்கம்ல இருக்கிற மைனஸ் 1 என்கிற பப். நுழைவு கட்டணம் 2000 ருபாய். பப் மற்றும் பாரட்டிய அதான் முதல் முறையா பாத்தேன். அந்த சூழல் எனக்கு ரொம்பவே புடிச்சது. காது கிளியர அளவுக்கு மியூசிக். எல்லாமே செம பீட்ஸ் இருக்கற சாங்க்ஸ். உள்ளே நுழைஞ்சதுமே நமக்கும் ஆட தோணும். இவ்ளோ பொண்ணுங்க பார்ட்டிக்கு வருவாங்கன்னு எதிர் பாக்கல. இதுவரைக்கும் சினிமால மட்டுமே பாத்தத இந்த பார்ட்டி கலாச்சாரத்த  அன்றைக்கு தான் நேர்ல பாத்தேன். தமிழ்நாடு நல்லாவே  முன்னேறிடுச்சு.

இந்த நியூ இயர் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எல்லா நியூ இயர்க்கும் எதாவது நெனச்சு பீல் பண்ணிட்டு இருப்பேன். ஆனால் இந்த வருஷம் அப்படி இல்ல. சென்ற ஆண்டின் கடைசி மணித்துளிகளும் இந்த ஆண்டின் முதல் மணித்துளிகளும் என் மனதுக்கு பிடித்த என்னவளோடு பேச முடிஞ்சது. இந்த மொபைல் நெட்வொர்க் எப்பவுமே சரியா 12 மணிக்கு ரொம்பவே மோசமாயுடும்னு நல்லாவே தெரியும். அதனால 11 :50 கே என்னவளிடமிருந்து கால் வந்தது. இந்த வருடத்தில் எனக்கு முதலில் வாழ்த்து சொன்னது என்னவள் தான். இதை விட சிறந்த முறையில் ஒரு புது வருடத்தின் தொடக்கம் அமையாது. அன்று நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்ல.

இந்த வருடம் எனக்கு ரொம்பவே முக்கியான வருடம் . என்னவளை நான் கரம் புடிக்க போகும் வருடம். அதனால இந்த வருஷம் ரொம்பவே ஸ்பெஷல்.

எல்லா வருசமும் எதாவது ரெண்டு மூணு  நியூ இயர் உறுதி மொழி எடுத்துப்பேன். ஆனா இது வர ஒரு தடவ கூட  அத கடை புடிச்சது இல்ல. இந்த வருசமும் ஒரே ஒரு உறுதி மொழி எடுத்தேன் . அது எப்படியாவது வார நாட்கள்ல காலைல தினமும் சீக்கிரம் எந்திரிக்கனும்க்றது தான் அது. கடந்த பத்து நாள்கள ஓரளவுக்கு பாலோ பண்ணிட்டேன். பாக்கலாம் இன்னும் எவ்ளோ நாள் அது முடியுதுன்னு. அது மட்டும் இல்லாமல் என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு உதவனும்னு நெனச்சிருக்கேன்.

புத்தகம் வாசிப்பது ரொம்பவே குறைஞ்சிடுச்சு. இந்த வருஷம் முதல் குறைஞ்சது ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும்.


நிறைய எதிர்ப்பார்புகளுடன் 2011 ஐ எதிர் கொள்கிறேன். பார்க்கலாம் எப்படி  இருக்குன்னு....

Monday, January 3, 2011

முதல் பதிவு

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

இது தான் நான் எழுதும் முதல் பதிவு.

எனக்கு பதிவுலகத்தை பற்றி தெரிந்தது 2008 ஆம்  ஆண்டில் தான். அதற்கு முன் சில ஆங்கில பதிவுகளை படித்திருக்கிறேன். தமிழ் பதிவுலகம் பற்றி அறிமுகம் கிடைத்தது எங்கள் ஊர் நண்பர் செல்வேந்திரன் மூலமாக தான். அவருடைய வலைதளம் தான் நான் முதலில் வாசித்த தமிழ் வலைபதிவு. அதன் பின் தான் அவர் follow செய்யும் வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.

அதற்கு பின் தான் தமிழ் வலை பதிவுலகம் எவ்வளவு பெரிதென்று தெரிந்தது. சினிமா, இலக்கியம், அரசியல், இசை என எல்லா துறைகளை பற்றியும் தமிழ் பதிவுலகில் நிறைய படிக்க நேர்ந்தது. தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது எனக்கு பிடித்த பதிவர்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். எனக்கும் பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் எதைப் பற்றி எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் நான் ஒரு மிகப்பெரும் சோம்பேறி. நான் ப்ளாக் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தது 2008ல். இப்போது முதல் பதிவு எழுதுவது 2011ல்.

இந்த புது வருடம் முதல் தொடர்ந்து பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். இனி வரும் பதிவுகளில் எனக்கு பிடித்த புத்தகம், சினிமா, இசை மற்றும் என் வாழ்வில் நான் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

இது மட்டும் இல்லாமல் தமிழ் பதிவுகளுக்கும் என் பர்சனல் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நான் இழந்ததாக நினைத்த என் உயிரை எனக்கு திருப்பி கொடுத்ததே இந்த பதிவுலகம் தான். நான் பதிவு எழுத காரணமும் அந்த உயிர் தான்.

நான் தினமும் விசிட் செய்யும் வலைத்தளங்கள் சில.

http://selventhiran.blogspot.com/
http://cablesankar.blogspot.com/
http://www.jackiesekar.com/
http://www.luckylookonline.com/
http://www.karkibava.com/
http://idlyvadai.blogspot.com/
http://www.parisalkaaran.com/
http://vigneshwari.blogspot.com/
http://vidhyascribbles.blogspot.com/
http://www.nee-kelen.blogspot.com/

இது தான் தமிழில் முதல் முறையாக டைப் செய்கிறேன் ஆதலால் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.